வியாழன், 19 நவம்பர், 2009
இணையத்தில் தமிழ்
தமிழில் பயன்படுத்துவது குறித்து வழிகாட்டும் சில இணையத் தளங்களுக்கு இணைபு இங்கே
http://thamizhilakkiyam.rediffblogs.கம்
http://developer.thamizha.com/tamilkey.html
http://valaipadhivan.blogspot.com/2005/04/windows-98-me-firefox-matter.html
http://www.domesticatedonion.net/blog/index.php?itemid=470
ஞாயிறு, 8 நவம்பர், 2009
குறுஞ்செய்திக்கு பின்னால்....
“saibaba never fails u.u will pass all exams.
send this mgs to 25 persions(except me).
if neclect it .badluck 4 up to 4 years.
its ture…100% ..try..” என்பது செய்தி. இந்த குறுஞ்செய்தியை நம்பினால் 100% பாஸ் செய்யவைப்பார் என்று தானே அர்த்தம். மனதில் ஒரு நம்பிக்கையை உருவாக்க சொல்லியிருந்தால் சரி தான். ஆனால் "இதை புரக்கநித்துவிட்டால் நாலு ஆண்டுகள் துரதிர்ஷ்டத்தில் தள்ளப்படுவாய் .இது உண்மை" என்று சொன்னால் என்ன அர்த்தம்.சாய்பாபா சபமிட்டுவிடுவார் என்பதுதானே.
அல்லது பயமுறுத்தி பக்தியில் இடுபடுத்தும் தந்திரமா? இந்த குறுஞ்செய்தி கிடைக்கப்பெறாத பல லட்சம் மாணவர்களின் கத்தி என்னவாகும்.
கடவுளோ,கடவுளுக்கு இணையனவர்களோ ஒரு கையில் வரத்தையுக்,மறுகையில் சாபத்தையும் ஏந்தி நிர்ப்பது கடவுள் தன்மைக்கு ஏற்புடையதாக இருக்குமா?
கடவுளை நம்பாதவர்கள் கூடதவறான செய்திகளைசொல்லி கடவுளை கேவலப்படுத்துவதில்லை.ஆனால் நம்பிக்கையாளர்கள் கடவுளை பெருமைப்படுத்த குறும் செய்திகளும் புகழ்ச்சிகளும் அந்த கடவுளையே கேலிக்கூத்தாக்குகிறது.
வேண்டுதல் நிறைவேறினால் மொட்டையடிப்பது, தேங்காய் உடைப்பது ,அழகு குத்திக் கொள்வது போன்ற நேர்த்திக்கடன்கள் கடவுளுக்கு பெருமை சேர்பபதாகாது.
மாறாக நாம் பெற்றுக்கொண்ட பொருளுக்கு மாற்றாக விலை கொடுப்பது போன்றதாகும். ஒரு காரியம் நடைபெற சிலரிட நாம் கொடுக்கும் கையுட்டுக்கு சமமான காரியமாகும்.வரலாறும்,வாழ்க்கை அனுபவங்களும் நமது சிந்தனையில் தெளிவை ஏற்படுத்த வேண்டும்.மாறாக நம்பிக்கையின்மையை அல்ல.